அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன், 31 பேர் காயமடைந்துள்ளனர்.
கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளுடன் வேகமாக சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து நிலை தடுமாறி பாரவூர்தியுடன் மோதியதாகவும், அதில் பேருந்தின் ஓட்டுநரும், பயணிகளும் என 11 பேர் பலியாகினர் என காவற் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 31 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கலிபோர்னியா காவற் துறை தெரிவித்துள்ளனர்.