சீனாவின் வடமேற்கு ஜின்மின் நகரில் இன்று 2 மணி அளவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இவை பற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.
இடிந்து விழுந்த வீட்டில் இருந்து 7 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் கைப்பற்றினர். மேலும் 94 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.