அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அதன் ஓடுதளத்தில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்காக்கோவின் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் அதன் ஓடுபாதையில் பயணித்த போது தீப்பிடித்துக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த நிலையில் விமானத்தின் சக்கரம் வெடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பயணத்தைத் தொடங்கும் திட்டத்தை விமானி கைவிட்டதாகவும் முன்னர் கூறப்பட்டது.
இதன் போது விமானத்தில் 161 பயணிகளும், 9 பணியாளர்களும் என 170 போர் இருந்ததாகவும், எனினும் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், 20 பேருக்குக் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, தீப்பற்றிக்கொண்ட போயிங் 767 ரக விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.