படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது மறைவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் அவரை நினைவு கூரும் வணக்க நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்ட கட்சிப் பிரதிநிதிகளும், பொதுமக்களும் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவுச் சுடர் ஏற்றி, மலவணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து இனந்தெரியா நபர்களால் ரவிராஜ் சுடப்பட்டார்.
<img src="http://ctr24.com/wp-content/uploads/2016/11/raviraj-300×245.jpg" alt="????????????????????????????????????" width="300" height="245" class="size-medium wp-image-1728"
மோசமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான அவர் உடனடியாகவே கொழும்பு தேசிய மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்ற ரவிராஜ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்.
சட்டத்தரணியான அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடி, கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.