Ottawa-Vanier தொகுதி மற்றும் Niagara West-Glanbrook தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவுகளே இன்று இடம்பெறவுள்ள நிலையில், மாநிலத்தில் நிலவும் மின்சாரக் கட்டண விவகாரம் வாக்குப் பதிவுகளில் தாக்கம் செலுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
ஒன்ராறியோவில் நிலவும் மின் கட்டண அளவு மக்களுக்கு சுமையாக உள்ளது என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாக முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ள போதிலும், அது இன்றைய தேர்தலில் எந்த வகையில் அவரது கட்சிக்கு உதவக் கூடும் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் தனது தொகுதி வாக்காளர்களிடமிருந்து மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்று லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவித்துள்ள நிலையில், மின் கட்டணங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளதாக பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் தெரிவித்துளளார்.
இதேவேளை இன்றைய இந்த இடைத் தேர்தலில் Niagara West-Glanbrook தொகுதிக்கு முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சார்பில் 19 வயது வேட்பாளர் சாம் ஊஸ்டோஃப் (Sam Oosterhoff) களம் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.