TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்துக் கழகம் தனது பயணச் சேவைகளுக்கான கட்டணத்தினை அடுத்த ஆண்டில் இரு்நது அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் சனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள இந்த கட்டண அதிகரிப்பில், பத்து சதத்தில் இருந்து மூன்று டொலர்கள் வரையிலான அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு போக்குவரத்துக் கழகத்தின் இயக்குனர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் மாதாந்த மெட்ரோ பாஸ்களும் 141.50 டொலர்களில் இருந்து 146.25 டொலர்களாக அதிரிக்கவுள்ளதாகவும், வாராந்த போக்குவரத்து அனுமதி அட்டைகள் 42.25 டொலர்களில் இருந்து 43.75 டொலர்களாக அதிகரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கான சாதாரண பணக் கட்டணம் 3.25 டொலர்களாகவே தொடரவுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணம் பத்து சதத்தினால் அதிகரித்து 2.10 டொலர்களாகியுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் தலைவர், அனைத்து விடயங்களிலும் விலை ஏற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், போக்குவரத்துக் கட்டணங்களில் அதிரிப்பு செய்யக்கூடாது என்றுதான் தாமும் முயற்சித்து வந்ததாகவும், எனினும் இந்த கடுமையான முடிவினை தாங்களும் எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் நகரசபையினால் வழங்கப்படக்கூடிய மானித்தொகை அதிரித்தால், போக்குவரத்துக் கட்டணத்தொகையைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும் எனவும், அது குறித்த முடிவு நரகசபை நிர்வாகத்தின் கைகளிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.