மாவீரர் வாரம் உலகத் தமிழர்க்ள அனைவராலும் தற்போது கடைப்பிகடி்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மொளன வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர், தீபன் நினைவு தூபிக்கு அருகாமையில் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிவில் உடையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்ட போதிலும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் நினைவுகூரலை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் நாளை நினைவூட்டும் வகையிலும் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்துக்குள் கடந்த புதன்கிழமை அதிகாலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சீருடை தரித்த காவல்த்துறையினர், சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.