நேபாள நாட்டின் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அது 5.2 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.05 மணிக்கு காத்மாண்டுவிலிருந்து 131 கி,மீ தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலநடுக்கம் இந்தியாவின் பீகார் வரையில் எதிரொலித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.