தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் பலியாகினர். 3 கால்பந்து வீரர்கள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர். இந்த விபத்துக் குறித்து. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். எனினும் மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணிக்காக சென்ற ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்தன.
வானிலை சீரானதும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தரை வழி மீட்புப்பணியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இறந்து போன 76 பேரில் 25 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.