‘நாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தமிழகத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், அது டிசம்பர் 2ஆம் நாள் அதிகாலை கரையைக் கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணியளவில் புயலாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் சுமார் 730 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் புயல் நிலை கொண்டிருப்பதாகவும், இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் நாள் அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே, கடலூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழியும் என்று முன்னுரைக்க்பபட்டுள்ளது.
2004ஆம் ஆண்டில் புயல்களுக்குப் பெயரிட ஆரம்பித்த பின்னர், தற்போது நாடா எனப் பெயரிடபடப்டுள்ள இந்த புயல் 45வது புயல் என்று வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.