அமெரிக்காவின் கடற்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் நன்றி தெரிவிக்கும் வகையிலான முதல் கூட்டம் ஒன்று ஒகியோ மாகாணத்தில் சின்சினாட்டி என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜேம்ஸ் மேட்டிஸ் அமெரிக்காவின் கடற்படை தளபதியாக இருந்த காலத்தில் 1991ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போரிலும், 2001ஆம் ஆண்டு தெற்கு ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரிலும் பங்குவகித்தவர்.
“பைத்தியக்கார நாய் ” என்று அறியப்படும் முன்னாள் சிறப்புப் படை வீரரான இவர், தன்னுடைய போர் தந்திர சிந்தனை, கடுமையான மொழி பயன்பாடு மற்றும் ஈரானிடம் நம்பிக்கையின்மை ஆகிய பண்புகளால் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.