2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள்[1] தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா, மற்றும் தன்சானியா உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் இலங்கையில் கண்டி நகரில் நடைபெற்றது.
பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.
2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் அரசு சார்பற்ற அமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து உலக சமூக மாமன்ற மாநாட்டை பிரேசிலில் நடத்தின.
இதன் விளைவாக 2003 இல் உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு இந்தியாவில் ஐதராபாது நகரில் நடைபெற்றது.இம்மாநாட்டில் இலங்கை, இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது, 2004 ஆம் ஆண்டு மும்பை மாநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2004 மும்பை மாநாட்டில் பன்னாட்டுத் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டது. இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான தினத்தின் அவசியம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. பிரித்தானியாவின் முதலாவது இந்திய அசாம் தேயிலைத் தோட்டத்தில் சீன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பர் 15 இல் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல் இந்நாளைக் கொண்டாடுவதென 2005 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது