ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
இந்நிலையில் வெளியான முதல் நாளில் மட்டும் சூப்பர் மேரியோ ரன் கேமினை சுமார் 2,850,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். முன்னதாக போக்கிமான் கோ, வெளியான முதல் நாளில் 900,000 பேர் டவுன்லோடு செய்தது குறிப்பிடத்தக்கது. நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சார்ந்த தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வழங்கப்பட்டு வந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
தற்சமயம் வரை ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் சூப்பர் மேரியோ ரன், இதே வரவிற்பினை எத்தனை நாட்களுக்கு பெறும் என்பதும் கேள்விகுறியாகவே இருக்கிறது. மற்ற கேம்களை போல் இலவசமாக வழங்கப்படாத நிலையில் தற்சமயம் பெற்றிருக்கும் டவுன்லோடுகளை வைத்து நின்டென்டோ குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியிருக்கிறது.
சூப்பர் மேரியோ ரன், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐஓஎஸ் இயங்குதளத்தில் முதலில் வெளியிடப்பட்டது. இதோடு ஆண்ட்ராய்டு இங்குதளத்தில் சூப்பர் மேரியோ ரன் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியாகும் பட்சத்தில் டவுன்லோடு எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரிக்கும்.