கனடாவின் பழங்குடியின மக்கள் சமூகத்தின் மத்தியில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்து்ளளார்.
பழங்குடியின சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாகி வரும் நிலையில், பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பலவும் இதுவரை பதிவாகியுள்ளன.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் விசாரணைகளின் போதும் பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஆணையகத்தின் விசாரணைகள் அங்கு மிகவும் ஆழமான சவால்கள் உள்ளதனை வெளிப்படுத்தக் கூடும் எனவும், காவல்த்துறை உள்ளிட்ட நடவடிக்கைப் பிரிவுகள், நீதித்துறை கட்டமைப்பு ஆகியவற்றின் உதவி மட்டுமின்றி அதற்கு அப்பாலும் பல்வேறு செயற்பாடுகள் தேவைப்படும் என்றே தாம் கருதுவதாகவும் அவர் கூறியுளளார்.
அந்த வகையில் பழங்குடியின மக்கள் சமூகத்தின் தலைவர்கள், பழங்குடியின சமூகங்கள் என்பவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அளவுக்கு, மிகப் பெருமளவிலான பிரச்சினைகள் அங்கு காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.