இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நம் வீட்டில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இணைய வசதியுடன் வெளியாகின்றன. நம் தேவைகளை அறிந்து செயல்படுவதில் இண்டர்நெட் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எவ்வித தொலைகாட்சியை பயன்படுத்துவோருக்கும், அதில் வழங்கப்படாத அம்சங்களை பயன்படுத்தி பார்க்க ஆசை இருக்கும். அந்த வகையில் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை உங்களது எச்டி டிவியிலேயே பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..
எச்டிஎம்ஐ (HDMI) கேபிள் பயன்படுத்தலாம்:
அனைத்து எச்டி டிவிகளிலும் உங்களது லேப்டாப்பை இணைக்க எச்டிஎம்ஐ போர்ட் வழங்கப்படும். இதன் மூலம் லேப்டாப் தரவுகளை தொலைகாட்சியில் இயக்க முடியும். ஒருவேலை உங்களின் எச்டி டிவியில் எச்டிஎம்ஐ போர்ட் வழங்கப்படவில்லை எனில் விஜிஏ (VGA) கேபிள் மூலம் லேப்டாப்பை இணைத்து உடன் ஆடியோ போர்ட்களையும் இணைக்கலாம்.
டாங்கிள் பயன்படுத்தலாம்:
எல்லா எச்டி டிவிகளையும் ஸ்மார்ட் டிவியாக மாற்ற பிரத்தியேக டாங்கிள் பயன்படுத்தலாம். கூகுள் க்ரோம்காஸ்ட் போன்று ஆண்ட்ராய்டு சார்ந்து பல்வேறு டாங்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த டாங்கிள்களை பயன்படுத்தி ஆன்லைன் தரவுகளை தொலைகாட்சியில் பயன்படுத்தலாம் என்பதோடு கூகுள் பிளே ஸ்டோரின் செயலிகளையும் இயக்க முடியும்.
வீடியோ கேம் கன்சோல்:
சோனியின் பிளே ஸ்டேனஷன் அல்லது மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட சாதனங்களில் கேமிங் தவிர ஆன்லைன் தரவுகளையும் இயக்க முடியும். இது போன்ற கேமிங் கன்சோல்களில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஹோம் தியேட்டர்:
எச்டி டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவதில் எளிய முறை இது தான். உங்களின் ஹோம் தியேட்டர் கணினியை (HTPC) மூலம் இணைத்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இதற்கு HTPCயுடன் எச்டிஎம்ஐ கேபிள் கொண்டே இணைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.