2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர்.அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.
அங்குள்ள மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர்.
இதேபோல் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவிலும் 2017 புத்தாண்டை வரவேற்றனர். நியூசிலாந்து வெளிங்கடனில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கே புத்தாண்டு கொண்டாடப்பட்டு விட்டது.
புவி அமைப்பின் படி டோங்கா மற்றும் 2 நாடுகள் இந்திய நேரப்படி இன்று மதியம் மூன்றரை மணிக்கு 2017 புத்தாண்டை முதன் முதலாக வரவேற்றது. அதன் பின் நியூசிலாந்து மாலை 4.30 மணியளவிலும் ஆஸ்திரேலியா 6.30 மணியளவிலும் புத்தாண்டை வரவேற்றது.