முக்கிய செய்திகள்

2017-ல் ஏழு ஸ்மார்ட்போன்கள்: இது நோக்கியா

1285

இந்த ஆண்டு களமிறங்குவது உறுதி செய்யப்பட்ட போதும் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்ற ரீதியில் நோக்கியா நலம் விரும்பிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா சார்பில் ஐந்து ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கசிந்துள்ள தகவலில் நோக்கியா பெயரில் மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆணட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து எச்எம்டி குளோபல் நிறுவனம் சில பீச்சர்போன்களையும் வெளியிடும் என கூறப்படுகிறது.

மலிவு விலை, பட்ஜெட் விலை மற்றும் ஃபிளாக்‌ஷிப் போன் என அனைத்து ரகங்களிலும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா D1C ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்ற ரீதியில் பலவறே தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோக்கியா D1C ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 2GB / 3GB ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் என இணையத்தில் வெளியான புகைப்படங்களில் அழகிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் P1 என அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்சமயம் வரை கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *