கனடா கூட்டரசாகியதன் 150ஆவது ஆண்டினை இந்த ஆண்டு கொண்டாடும் நிலையில், அதற்கு இரண்டாவது எலிசபெத் மகாராணியாரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காணொளிப் பதிவு ஒன்றின் ஊடாக, ஆங்கிலத்திலும் பிரஞ்சு மோழியிலும் இந்த வாழ்த்துச் செய்தியினை வழங்கியுள்ள அவர், அனைவரையும் வரவேற்பதிலும், அவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்குவதிலும், அனைவர் மீதும் இரக்கம் காட்டுவதிலும் சிறந்த நாடு என்ற பெயரை கனடா சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பன்முகத் தன்மை, சுதந்திரம், அனைவரையும் உள்ளடக்குதல் போன்ற சிறந்த மான்புகளை அனைத்துக் கானேடியர்களும் தொடரவேண்டும் என்ற ஊக்கத்தினை தான் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் தெரிவித்துள்ளதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
அவ்வாறான நற்பண்புகளை இறுக்கமாக பற்றிக் கொண்டுள்ள கனடா, தற்போதும் அவற்றினை சிறந்த முறையில் கைக்கொண்டு வருவதாகவும், இன்னும் இளமையாகவே உள்ள கனடா தொடர்ந்தும் இதே நற்பண்புகளுடன் செழித்தோங்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
இவ்வாறான சிறந்த மான்புகளை தொடர்ந்து பேணுவதும், அதனை எவ்வாறு அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்வது என்பதையும் உலகுக்கு உணர்ந்தும் வாயப்பினை எதிர்வரும் ஆண்டுகளில் கனடா பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.