இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எட்கா எனப்படும் பொருளாதார தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து கொழும்பில் இன்று உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இந்திய பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அறுவர் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்கா குறித்து ஏற்கனவே டெல்லியிலும் இலங்கையிலும் பலசுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இறுதி நகர்வுகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.