நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியினர் பொதுமக்களை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான முதலீட்டு ஊக்குவிப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலான ஆரம்ப நிகழ்வு ஹம்பாந்தோட்டையில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஆதரவான ஒரு தரப்பினரும் எதிரான மற்றுமொரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டனர். இதில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.