தற்போது வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 மாணவர்கள் 3A பெறுபேற்றினையும் , 15 வரையானோர் 2A,B பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டமானது க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் படி வணிகப் பிரிவில் முன்னேற்றபரமான நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2013, 2014 ம் ஆண்டுகளின் பெறுபேறுகளின் படி வணிகப்பிரிவில் கிளிநொச்சி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்திலும் (25மாவட்டங்களில்) 2015ம் ஆண்டு ஐந்தாம் இடத்திலும் இருந்தமை விசேட அம்சமாகும்.