காளையடக்கும் போட்டி தொடர்பான வழக்கின் தீர்ப்பை பொங்கல் நாளிற்கு முன்னதாக வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
தைப்பொங்கலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தீர்ப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு அது பொரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இம்முறையேனும் காளையடக்கும் போட்டிகளை நடாத்த வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் அங்கு போராட்டங்கள் இன்னமும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தடையை மீறி இம்முறை காளையடக்கும் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதேவேளை கடலூர் அருகே தடையை மீறி இன்று காளையடக்கும் போட்டிகளை நடாத்திய நாம் தமிழர் கட்சி உறுப்பனர்கள் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.