ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லம், சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு இல்லம் வழங்கப்பட்டுள்ளது. தமக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குமாறு இதற்கு முன்னர் பல தடவைகள் சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிய போதிலும் உரிய பதில் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
ரட்னசிறி விக்ரமநாயக்க பயன்படுத்திய வீட்டை சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.