தனது தந்தையை மீண்டும் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று 12 வயது சிறுவன் கண்ணீர் மல்க பாடிய கவிதை எல்லோர் மனத்தினையும் நெகிழ வைத்திருந்தது. காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட இந்த 12 வயதான சிறுவன் , யுத்தத்தின் காரணமாக தனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். மேலும் தந்தையின் இழப்பால் தவிக்கும் தாய் மற்றும் தனது ஏக்கத்தினை வெளிப்படுத்துவதற்காக அந்த சிறுவன் பாடிய கவிதை, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், இறுதியில் அந்த கடவுளுக்கு கருணை இருந்தால் எமக்கு உதவ வேண்டும் என கூறி சோகத்தினை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறி அழுதான்.