இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணித்துள்ளார். ஜெயராம் ரங்கனாத் எனப்படும் மாஸ்டர் ரங்கனாத் என்பவரே மரணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கியதாக ரங்கனாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சிவராசன் மற்றும் அவரது சகாக்களுக்கு அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தி, ரங்கனாத்திற்கு தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
ரங்கனாத் நேற்றைய தினம் பங்களுருவில் மரணித்தார் என தெரிவிக்கப்படுகிறது. ஒன்பதரை ஆண்டுகள் தமிழகத்தில் சிறைத்தண்டனை அனுபவித்த ரங்கனாத் கடந்த 1999ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ரங்கனாத் சிறுநீரக கோளாறு காரணமாக அண்மைக் காலமகாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்க்பபடுகிறது.