சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று கடுமையான வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு ஆதரவு படைகளை சேர்ந்த 12 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள டேயிர் எஸ்ஸோர் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
டேயிர் எஸ்ஸோர் நகரில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.