செவ்வாய்க்கிழமை காலையில் ரொர்னரோ பொரும்பாகத்தில் உறைபனி மழையின் தாக்கம் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தனது சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், ரொரன்ரோ பெரும்பாகம் உட்பட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களின் அனேகமான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை உறைபனி மழை பொழியக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை திங்கள் பின்னிரவில் இருந்தே இந்த உறைபனி மழை ஆரம்பமாகக் கூடும் எனவும், ஒன்ராறியோவின் தென் மேற்கு பிராந்தயங்களில் ஆரம்பமாகும் இந்த உறைபனி மழை கிழக்கு நோக்கி நகர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வேளையில் ரொரன்ரோ பெரும்பாகத்தினை நெருங்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வேளைக்கு பின்னர் சற்று அதிகரிக்க கூடும் என்பதுடன், அந்த நிலைமை தொடரக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒன்ராறியோவின் தென்மேற்கு பிராந்தியங்களில் செவ்வாய்க்கிழமை உறைபனி மழையானது மழைப் பொழிவாக மாற்றடைய வாய்ப்புள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் செவ்வாய் இரவு அல்லது புதன் காலை வரையில் உறைபனி மழை காயப்படக்கூடும் எனவும் கனேடிய சுற்றச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.