சென்னையில் 2வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்காக மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திய போதிலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இன்றி, தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரீனாவில் சாலையின் இருபுறமும் மாணவர்கள் பெருமளவில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சோழிங்கநல்லூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், மெரீனா பகுதியில் திரண்டதால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம் பகுதி, கோவை வ.உ.சி., மைதானம், திருச்சி விமான நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அப்பகுதிகள் முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.
சென்னையில் 2வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்காக மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திய போதிலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இன்றி, தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மாணவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது 3வது முறையாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.