இலங்கையில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது என்று நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமைய புதிய அரசியல் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் மூலம் சமஷ்டி அரசாங்கம் உருவாகாது என்று அரசியலமைப்பு ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நவரத்ன பண்டார குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.