தம்மால் எதிர்பார்க்கப்பட்டதனையு்ம விட குறைவான பயணிகளே 2016ஆம் ஆண்டில் பொதுப் போக்கவரத்துகளைப் பயன்படுத்தியுள்ளமையால், தமது வருமானத்தில் 46 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக TTC எனப்படும் ரொரன்ரோ பொதுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ரோரன்ரோ பொதுப் போக்கவரத்துக் கழகத்தின் செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படும் அறிக்கை ஒன்றில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதி வரையில் 538 மில்லியன் பயணிகளின் போக்குவரத்துகளே இடம்பெற்றுள்ளதாகவும், டிசம்பர் மாத்தின் தரவுகள் இன்னமும் தயாராகவில்லை எனவும் தெரிவித்துள்ள TTCயின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆன்டி பைஃபோர்ட், கடந்த ஆண்டின் தமது இலக்கில் இருந்து 15 மில்லியன் போக்கவரத்துகள் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரொரன்ரோ பொதுப் போக்கவரத்து சேவைகளில் மட்டுமின்றி ரொரன்ரோ பொரும்பாகத்தின் பல பாகங்களிலும் செயற்படும் மேலும் பல போக்கவரத்து நிறுவனங்களும் இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்து்ளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரொரன்ரோ மட்டுமின்றி கனடாவில் நாடு தழுவிய அளவிலும், அமெரிக்காவிலும் கூட கடந்த ஆண்டில் பொதுப் போக்கவரத்துச் சேவைகளை மக்கள் பயன்படுத்தியுள்ள அளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.