எதிர்வரும் வசந்தகால வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர், ஒன்ராறியோ மக்களுக்கு மேலும் பல மின்கட்டன சலுகைக்ள அறிவிக்கப்படும் என்று முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.
இன்று வின்ட்சர் பிராந்திய மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், மின் கட்டண சலுகைகளுக்காக அடுத்த வரவு செலவுத் திட்டம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோவில் ஏற்பட்டுள்ள மின் கட்டண அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல்களிலும் அது லிபரல் கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து்ளளமை குறிப்பிடத்தக்கது.
மின் கட்டண அதிகரிப்புகளுக்கு தமது தவறுகளே காரணம் எனவும், கட்டண குறைப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கத்தலின் வின முன்னரும் கூறியுள்ளதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை தமது வர்த்தக உறுப்பினர்களில் அரைப் பங்கினரின் மின் கட்டணங்கள் 20 சதவீத்தினால் அதிகரித்துள்ளதனை கனேடிய சுயாதீன் வர்த்தக சபையும் சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இதனால் பல்வேறு உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தொழிற்சாலைகள் தள்ளப்பட்டுள்ளதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறன நிலையிலேயே மேலும் பல மின் கட்டண சலுகைகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் முன்னர் அதனை அறிவிக்கவுள்ளதாகவும் உறுதியளித்து்ளளார்.