ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் விரட்டியடிக்க முயற்சி
சர்வாதிகார மனப்பான்மையுடன் போராட்டத்தை தீர்க்க நினைப்பதா : ஸ்டாலின் கண்டனம்
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கலைத்த போலிசார்
ஒரு காவல் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீ வைத்தனர். தீயணைப்புப் படையினர் அத்தீயை அணைக்க முயன்றுவருகிறார்கள்.
திருவல்லிக்கேணியில் பல இடங்களில் சாலைகளில் வன்முறையாளர்களை போலிசார் விரட்டுவதையும், சில இடங்களில் வாகன்ங்கள் கொளுத்தப்படுவதையும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களைக் கலைக்கும் முயற்சியில், அவர்களுடன் போலிசார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்று அங்கிருக்கும் நமது செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.
ஓரிரு இடங்களில் போலிசார் கட்டுக்கடங்க மறுக்கும் கூட்டத்தினர் மீது லேசான தடியடி நடத்தினர் என்று செய்திகள் கூறுகின்றன.
சென்னைக் கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளையும் போலிசார் மூடியுள்ளனர்.
இந்த செய்தியைப் பகிர்க ப