நம் உணவு பலகாரங்களில் உளுத்தம்பருப்பு முக்கிய பயன் உள்ள தானியமாக பயன்படுகிறது. குறிப்பாக, இட்லி, வடை, இன்னும் பல பல பதார்த்தங்களுக்கு கலவையாக பயன்படுகிறது.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கருப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம்.
உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
கருப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும். முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது. நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
உடலை தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்; கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.