சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்பாப்புலவுக்கு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று வரவுள்ளதாகவும், மக்களை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கேப்பாப்புலவில் நிலைகொண்டிருக்கும் 159ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை ஜனாதிபதி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், விடுவிக்கப்படும் பிரதேசத்தில் கேப்பாப்புலவைச் சேர்ந்த தமது காணிகள் எவையும் இல்லையெனவும், மாறாக வற்றாப்பளை கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகளே விடுவிக்கப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் ஒன்றுதிரண்ட 40இற்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.