ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவினால் ஏற்பட்டுள்ள குளிரை தாங்க முடியாமல் 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் வீதிகளில் பனி 50 சென்டிமீட்டர் அளவு உயரத்துக்கு காணப்படுவதால் நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸிலும் குறைந்து காணப்படுவதால் மக்கள் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவுவதனால் அதிகளவான மக்கள் உயிரிழக்கின்றனர். 2015 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகள் காரணமாக 300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.