தமிழகம் சென்னையில் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஊடகவியலாளரான முத்துக்குமார் அவர்கள் தமிழீழத்தில் நடந்த தமிழினப் படுகொலையையும் அப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசையும் மற்றும் தமிழினப் படுகொலை களை கொத்து கொத்தாக அரங்கேற்றிக் கொண்டிருருந்த இலங்கை அரசனையும் கண்டித்து தன்னை தானே தீக்கிரையாக்கிய ஈகைப் போராளி அமரர் .முத்துக்குமார் அவர்களின் நினைவு தினம் இன்று உலகத் தமிழ் மக்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அமரர் .#முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன், தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றில் கரைந்தான். தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய பலருடைய கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ஈழப் போரின் தமிழ்நாட்டு எழுச்சியை ‘முத்துக்குமாருக்கு முன், பின்’ என இரண்டாகப் பிரிக்கலாம். அந்த ஒற்றை உயிருக்குப் பின்னால் கிளர்ந்து திரண்டது உணர்வலைகள்.
தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் முடிக்கு சமானம். எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி ,உரிமை மீறல் ,அத்துமீறல் ,இன சுத்திகரிப்பு பலவும் நடந்த வண்ணமாகவே உள்ளது என்பது தொடர்கதையே இன்றைய ஆட்சி அதிகாரதிலும் .. இலங்கை மேலாத்திக்கதிற்காக, இந்திய தெற்காசிய மேலாதிக்கதிற்காக, பன்னாட்டு சுரண்டலுக்காக, என எம்மவர்களின் உடமைகளும் , உரிமைகளும் நாளாந்தம் பறிக்கப்பட்டவர்களாக தாயக மக்களின் நிலை உள்ளமையினை எல்லோரும் அறிவர் , நெருடல் என்னவெனில் இவர்கள் போன்றவர்களின் தியாகங்களின் பின் கூட எம் அரசியல்வாதிகள் ,மனித உரிமை அமைப்புகள் ,தமிழ் நலன்சார் அமைப்புகள் என எல்லோருமாக ஒன்றிணைத்த ,ஒருமித்த குரல்களாக செயல்படுகிண்டார்களா என்றால் இல்லை என்கின்ற பதிலே கோபத்தையும் அத்துடன் பெரும் நெருடலலையும் தருகின்றது .
”விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?” என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா…?