‘மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி நடந்தது.
அதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மிட்டனெரே (24) பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரான்சை சேர்ந்தவர். பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். கடந்த ஆண்டு பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.