பதவிக் காலம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் முதன் முறையாக பராக் ஒபாமா தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந் தேதி அதிரடியாக நிர்வாக ரீதியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி
வைக்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ஒபாமா தற்போது தனது மவுனத்தை களைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
பதவிக் காலம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் முதன் முறையாக பராக் ஒபாமா தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.