முல்லைத்தீவில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை, மீள வழங்குவதற்கு மூன்று மாத காலஅவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்துள்ளனகுறித்த காணிகளை தம்மிடம் மீள வழங்குவதற்குமாறு வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவுக்குடியிருப்பு கிராம மக்களை இன்று சந்தித்த போதே அரசாங்க அதிபர் காலஅவகாசத்தை கோரியிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிப்பதற்காக நேற்று வருகைதருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கிராம மக்கள் அங்கு சென்றிருந்தனர். எனினும் எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்தரையாடி காணிகளை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்தனர்.
இந்த நிலையில் நேற்றுமாலை அளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்லவென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். எனினும் அந்த உறுதிமொழியையும் ஏற்க மறுத்த பிலவுக்குடியிருப்பு மக்கள் அங்குள்ள இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அந்த மக்களை சந்தித்து, மூன்று மாதகால அவகாசத்தை கோரியுள்ளார்.
எனினும் அதனை ஏற்க மறுத்துள்ள பிலவுக்குடியிருப்பு மக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் மற்றும் துரைராஜா ரவிகரன் ஆகியோர் சந்தி த்து கலந்துரையாடியுள்ளனர்.ர்.