ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநில திருத்த சட்டம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு இன்று தமிழக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் ஜல்லிக்கட்டு ஒரு சட்ட விரோத செயலாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு தவிர, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடு விழா போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி;யில் கூறப்பட்டுள்ளது.