போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 31ம் திகதி மன்னார் – வட்டக்கண்டல் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போர்குற்றங்களை வடமாகாணசபை விசாரிக்க முடியுமா என ஆராயவேண்டும் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மிகமோசமான விமர்சனங்களை தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். போர்குற்றங்களை வடமாகாணசபை விசாரிக்க முடியுமா என சட்டத்தில் ஆராய வேண்டும் என நான் கூறியதற்கே பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் மனப்பதற்றத்தில் உள்ளார்கள் அதனையே என் மீதான விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகிறது.
போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா? என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை. போர்குற்றங்களை விசாரிக்கும் விடயத்தில் பெரும்பான்மையின தலைமைகள் என்ன மனோநிலையில் உள்ளார்கள் என்பதை உலகத்திற்கும், மக்களுக்கும் வெளிச்சம்போட்டு காட்டுவதற்கேயாகும். நான் என்ன நடக்கும் என நினைத்து கூறினேனோ அத்தனையும் நடந்து கொண்டிருப்பதை நான் பார்த்து கொண்டிருக்கின்றேன்.
மேலும் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்ற மனோநிலையிலேயே உள்ளனர்கள் என்பதை என்னுடைய கருத்துக்கு பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் மனப்பதற்றத்தில் கூறும் கருத்துக்கள் ஊடாக அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது. என்னுடைய சிறு கருத்துக்கே இவ்வாறு கூறிக்கொண்டிருப்பவர்கள் எப்படி போர் குற்றங்களை விசாரிப்பார்க