காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது 58) , என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாயில் வசிக்கும் குறித்த அதிபர் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தற்போது எவருமே வசிப்பதில்லை.
காலையில் வீட்டில் இருந்து சென்ற அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். அதன் பின்பு அளவெட்டி வீட்டினையும் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட சமயம் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டவேளையில் அலைபேசி இயங்கும் சத்தம் வீட்டிற்குள் இருந்து வருவது கவனிக்கப்பட்டது. இதனையடுத்தே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உறவினர்கள் உள்ளே சென்று பார்வையிட்டுள்ளனர்.