பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், இலங்கை மெதுவாகவே செயற்படுவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், பிரதமர் ரணில் விஇந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பங்கேற்ற இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக, கலந்தாய்வு செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை வரவேற்றுள்ளார். “அதேவேளை, பல்வேறு விடயங்களில், குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்களில் மெதுவான முன்னேற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளமை குறித்த எனது கவலையை வெளியிட்டேன். இதுவும், கரிசனைக்குரிய ஏனைய விவகாரங்களும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் நான் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் இலங்கைப் பிரதமருக்குத் தெரிவித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.க்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.