“எதிர்க்கட்சியினர் உருவாக்கும் இந்த சலசலப்பைக் கண்டு நானும் அதிமுகவும் அஞ்சமாட்டோம்; கடந்த 5 ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரகசிய கூட்டமல்ல, அது கடைசி நேரத்தில்தான் தனக்கு தெரிய வந்தது என பன்னீர்செல்வம் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்று சசிகலா தெரி்வித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சசிகலா
அதிமுகவின் பொதுச் செயலர் சசிகலா மீது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளதையடுத்து இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வி.கே.சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.
“33 ஆண்டு காலம் ஜெயலலிதா அவர்களை நோக்கி வந்த எத்தனையோ எதிர்ப்புகளை அவர்களுடன் சேர்ந்து நானும் சந்தித்திருக்கிறேன் தற்போது இதையும் வெல்வேன்” என்று வி.கே.சசிகலா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சசிகலா
“ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் உட்பட பலர் என்னை முதலமைச்சராக பதவியேற்கும்படி வற்புறுத்தினார்கள் ஆனால் அப்போது நான் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் இல்லை; இங்கு முதலமைச்சர் என்ற சொல்லைக் காட்டிலும் அம்மா என்ற சொல்லுக்கு மதிப்பு அதிகம்; ஜெயலலிதா அவர்கள் வகுத்த பாதையை தாண்டி யார் செயல்பட்டாலும் அதை கட்சி கண்டுபிடித்துவிடும்” என்றார் அவர்.
“எதிர்க்கட்சியினர் உருவாக்கும் இந்த சலசலப்பை கண்டு நானும் கட்சியும்அஞ்சமாட்டோம் கடந்த 5 ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரகசிய கூட்டமல்ல அது கடைசி நேரத்தில்தான் தனக்கு தெரிய வந்தது என பன்னீர்செல்வம் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்று சசிகலா தெரி்வித்துள்ளார்.
என்னை சட்டமன்றக் குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தவருக்கு 48 மணி நேரத்தில் என்ன நடந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சசிகலா
“சட்டமன்றத்தில் பன்னீர்செல்லவத்தை ஆதரித்து துரைமுருகன் பேசியதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் பன்னீர்செல்வம் மவுனம் காத்த போதே அவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது அதற்கு கழகத்தில் பிறர் எதிர்ப்பை தெரிவித்தபோதிலும் பன்னீர் செல்வத்தின் கருத்திற்கு உரிய மரியாதையை அளித்தேன்”. என்று தெரிவித்த சசிகலா, சட்டமன்றத்தில் திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட வார்த்தை பரிமாற்றத்தை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது”. என்றும் தெரிவித்துள்ளார்.
துரோகமும் விரோதமும் கைகோர்த்தன
சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சசிகலா
“கட்சிக்குள் திமுக ஏறபடுத்திய குழப்பம் இது என்பது நேற்று ஸ்டாலின் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து தெரிய வந்தது. மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன்.துரோகமும் – விரோதமும் கை கோர்த்து வந்த போதிலும் அது தோற்று ஓடிவிடும்” என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியுள்ளார் சசிகலா.
மேலும் தனது உரையில் அச்சம் என்பது மடமையடா என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் சிலவற்றையும் மேற்கொள் காட்டிப் பேசியுள்ளார் சசிகலா.