தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைத்ததாக கூறிய அவர், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு இன்று சென்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர் எனவும் இன்றையதினம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, அவர்களை நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்துள்ளதாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்ததும் அவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0