‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேரணியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் ரேவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்று வருகின்றது. பேரணி விபுலானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தவுடன், நண்பகல் 12 மணியளவில் எழுக தமிழ் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.