பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள பிலேமன்வில் அணுஉலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஊழியர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அணுமின்நிலைய வெடிவிபத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று செர்பர்க் மூத்த அதிகாரி ஆலிவியர் மர்மியான் கூறுயுள்ளார். மேலும் இந்த சம்பவம் வெடிவிபத்தே என்றும், இது அணு விபத்து அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணு உலையில் நிகழ்ந்துள்ள இந்த வெடி விபத்தினால் கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த விதமான மாசு ஆபத்தும் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அணு ஆலைகளை மூடக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பபிரான்ஸ் அணுஉலையில் வெடிவிபத்து: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என தகவல்