தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்பு சூழ்நிலையில், சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதன் காரணமாக, எடப்பாடி பழனிச் சாமி, அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தாவிய முக்கிய தலைவர்களான தலைவர்களான சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னால் அமைச்சர் முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 21 பேர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாலர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மேற்கண்ட 21 பேருடன் தொடர்புடைய கட்சியினரும் நீக்கப்படுவார்கள் என கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.