கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் நீதன் சன் 4763 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது மொத்த வாக்குகளில் 45.76 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் சுஹைர் சையத் என்ற வேட்பாளர், 1452 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நீதன் சன்னுக்கு, மாநகர முதல்வர் ஜோன் ரொரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரொறன்டோ மாநகரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள முதல் தமிழர் நீதன் சன் என்பது குறிப்பிடத்தக்கது.