பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சுதாகரன் இன்று (15-ம் தேதி) சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக உடல்நிலையை காரணம் கூறி சரண் அடைவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சரண்டைந்தார். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.